Bonum Certa Men Certa

Tamil

முன்னுரை:

பாய்காட் நொவல் (நொவலை ஒதுக்கு) இணையதளமானது , நொவல் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்த மென்பொருள் காப்புரிமை ஒப்பந்தத்தை கண்டித்து தொடங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை செய்ய நொவல் நிறுவனம் தான் முதலில் மைக்ரோசாப்டை அணுகியது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், போட்டி நிறுவனங்களையும் , மென்பொருட்களையும் அழிக்கும் சட்ட விரோதமான செயல்களுக்கு பெயர் போனது. பல லினக்ஸ் பயனாளர்களின் எதிர்ப்பையும் மீறி நொவல் நிறுவனம் மைக்ரோசாப்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது லினக்ஸுக்கும் அதன் கட்டற்ற (சுதந்திர) கொள்கைகளுக்கும் பல வகையிலும் அச்சிறுத்தலாக அமைந்துள்ளது.

மைக்ரோசாப்டும் , நொவலும் குனு/லினக்ஸுக்கு எதிராக செய்த அத்துமீறல்களை கீழ்கண்ட பத்தியில் காணலாம்:

- லினக்ஸுக்கு பயனாளர்களுக்கும் அதை பயன் படுத்தும் நிறுவனங்களுக்கும் எதிராக அச்சம்,சந்தேகம்,நம்பகமின்மை போன்றவறை வளர்த்துவிடுதல் ./o/2006/11/17/i-thought-novell-said-there-were-no-infractions/ .இது ஸ்கோ (SCO https://techrights.org/o/wiki/index.php/SCO ) செய்ததைப் போன்றது.

- குனு/லினக்ஸை உள்ளடக்கிய மென்பொருள் காப்புரிமை ஒப்பந்தங்கள் மூலம் பயனாளர்களை அச்சிறுத்துதல் (எ.டு https://techrights.org/o/company-blacklist/ லின்ஸ்பயர், ஸாண்றோஸ் மற்றும் டர்போ லினக்ஸ் )

- லினக்ஸ்ஸுக்கு எதிரான மென்பொருள் காப்பீட்டு வழக்குகள் ( எ.டு டாம் டாம் https://techrights.org/o/2009/04/04/tomtom-case-is-concluded )

- கட்டற்ற சுவடுகளை ஒதுக்கி , காப்புரிமை பெற்ற சுவடுகளை பயன்படுத்துதல் ( ஒடிஎப் , https://techrights.org/o/2008/10/13/the-laws-of-open-standards/ )

- 'கட்டற்ற மென்பொருள்' என்ற வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றுதல் https://techrights.org/o/2008/05/29/stealing-furthe-rprogress-for-microsofts-attopen-source/

- காப்புரிமை உடைய மென்பொருட்களை குனு/லினக்ஸிகுள் புகுத்துத்தி மைக்ரோசாப்டின் தொழில் நுட்பங்களை நியதியாக மாற்றுதல் (எ.டு மொனோ, மூன்லைட் https://techrights.org/o/wiki/index.php/Mono ,/o/wiki/index.php/Moonlight ) https://techrights.org/o/2008/03/24/mono-danger-to-linux/

இந்த தளத்தில் நொவல் மற்றும் மைக்ரோசாப்டின் அட்டூளியங்களை பட்டியலுடுவதுடன், வாசகர்களுக்கு அவர்களின் மற்ற சட்டவிரோதமான செயல்களை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறோம். இந்த தளம் தொடர்ந்து பல தகவல்களை சேகரித்து வருகிறது, நீங்களும் எங்கள் தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் எங்களுக்கு உதவலாம். இற்றைய தகவல்/செய்திகளை அறிய கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும் https://techrights.org/o/?stories